×

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரின் ஆதரவை நாடும் இந்தியா கூட்டணி

 

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரின் ஆதரவை நாடும் முனைப்பில் இந்தியா கூட்டணி மேற்கொண்டுவருகிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த நிலையில் இந்த முறை கூட்டணி அல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக 293 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில் ஆந்திராவின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மீதும் பாஜக மற்றும் இந்திய கூட்டணியின் பார்வை திரும்பியிருக்கிறது. இரு கட்சிகளும் சேர்த்து மொத்தம் 30 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன. தற்போது பாஜக கூட்டணியில் இருக்கும் இந்த 2 கட்சிகளின் ஆதரவு இல்லை என்றால் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது.  அதேநேரம் இந்த இரு கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இந்தியா கூட்டணி சார்பில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு பேசப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது,