சந்திரபாபு நாயுடு மூலம் ஏற்பட்ட களங்கத்தை துடைக்க 28-ஆம் தேதி சிறப்பு பூஜை- ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அரசியல் ஆதாயத்திற்காக புனிதமான திருப்பதி லட்டில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்த சம்பவத்தை அடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் ஓ எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் புனிதம், சுவாமியின் பிரசாதத்தின் தனிச்சிறப்பு, வெங்கடேஸ்வர சுவாமியின் மகிமையை கொடுக்கும் விதமாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அரசியல் லாபத்திற்காக லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக கூறினார். தன்னுடைய அரசியலுக்காக லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்த லட்டு பக்தர்கள் தின்றதாகவும் கூறியுள்ளார். முதல்வர் பதவியில் இருந்து கொண்டு திருப்பதி லட்டுக்கும் வெங்கடேஸ்வர சாமிக்கு கலங்கம் ஏற்படுத்தி உள்ளார்.
எனவே மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதியிலும் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.