×

ஆந்திராவில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்திக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி

 

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. 543 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ,சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களும் நடைபெற்றன . ஆந்திராவை பொருத்தவரை ஆரம்பகட்ட முதல் தெலுங்கு தேசம் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  ஆந்திராவில் மொத்தம் 175 சட்டப்பேரவை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் 88 இடங்களை வெல்லும் காட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

அந்தவகையில்  ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி 120 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில்,  ஒய்எஸ்ஆர்  காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது பாஜக 6 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

 ஆந்திர சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த தேர்தலை விட 100 இடங்களுக்கு மேல் இந்த முறை இழந்துள்ளார். மத்தியில் பாஜக அரசிற்கு மிக வெளிப்படையான ஆதரவை வழங்கியவர்களில் ஜெகன்மோகன் ரெட்டியும் ஒருவர். தேர்தல் நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு உடன் கூட்டணி அமைத்தது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.