மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரஜ்வல் சஸ்பெண்ட்..!
Apr 30, 2024, 12:45 IST
பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக பகீர் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. எச்.டி. ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீதும் ஏற்கனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் புகாருக்கு உள்ளான எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ஜெர்மனி தப்பி சென்றுள்ளார். எச்.டி. ரேவண்ணா கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மூத்த சகோதரர் ஆவார்.