×

ஜார்கண்டில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது ஜே.எம்.எ. கூட்டணி!

 

ஜார்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. 

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு அணியாகவும், இண்டியா கூட்டணி மற்றொரு அணியாகவும் களமிறங்கின. இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 41 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். 

ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் ஜே.எம்.எம்.கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில்,  மொத்தமுள்ள 81 இடங்களில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 48 இடங்களிலும், பாஜக கூட்டணி 30 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.