×

6 ஆண்டுகளுக்கு பின் வெளியான ஜூனியர் என்டிஆர் படம்- பார்த்தவுடன் மாரடைப்பால் பலியான ரசிகர்

 

 

ஜூனியர் என்டிஆர்  நடித்த ஆறு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வெளியான தேவரா  படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த உற்சாகத்தில் மாரடைப்பு ஏற்பட்டு  ரசிகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கு திரைப்பட நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்து ஆறு ஆண்டுகால இடைவேளைக்கு பிறகு தேவரா திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் நாடு முழுவதும் திரையரங்கில் வெளியிடப்பட்டது. காலை ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்ட நிலையில்  இதனை காண வந்த ரசிகர்கள் கிடா வெட்டி, பட்டாசுகள் வெடித்தும் மெளம், தாளங்கள் கொட்ட கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சிந்தகொம்மடின்னே மண்டலத்தில் உள்ள ஜம்மலப்பள்ளியைச் சேர்ந்த மஸ்தான்வலி ஜூனியர் என்டிஆர் தீவிர ரசிகர் ஆவார்.  

தேவாரா திரைப்படம் வெளியாவதையொட்டி நேற்று காலை கடப்பா அப்சரா திரையரங்கில் ரசிகர்கள் காட்சியை விசில் அடித்தும், நடனமாடி உற்சாக மிகுதியில்  படம் பார்த்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.  இதைப் பார்த்த உடன் வந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அங்கு டாட்கர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மஸ்தான்வலிக்கு  மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு ஜூனியர் என்டிஆர்  உதவ வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.