×

"லட்டு சர்ச்சை உண்மையெனில் என் குடும்பமே அழிந்து விடும்"- முன்னாள் தேவஸ்தான நிர்வாகி

 

திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு தலைவராக தான் இருந்தபோது லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்படுவதாக முதல்வர் சந்திரபாபு கூறிய குற்றச்சாட்டுக்கு உண்மையான இருந்தால் என் குடும்பமே அழிந்து விடும் ஏழுமலையான் கோயில் முன்பு கற்பூரம் ஏற்றி உறுதிமொழி எடுத்த முன்னாள் தலைவர் கருணாகர் ரெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக  குற்றச்சாட்டுக்கு முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் புனித நீராடி கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றினார். மேலுக் கற்பூரதை கையில் ஏந்தி நான் தலைவராக இருந்தபோது  நெய்யில் கலப்படம்  செய்திருந்தால் நான் தவறு செய்திருந்தால் எனது குடும்பமே அழிந்து போகட்டும் என உறுதிமொழி எடுத்தார். திருமலையில் அரசியல் பேசக்கூடாது என்பதால்  உடனடியாக  போலீசார் அவரை தடுத்து  திருப்பதிக்கு அனுப்பி வைத்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.