×

வயநாடு நிலச்சரிவு - இதுவரை 123 பேர் உயிரிழப்பு

 

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 2 மணி தொடங்கி தொடர் நிலச்சரிவு ஏற்பட்டு வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகளில் சாலைகள், பாலங்கள் என வழித்தடங்கள் புதைந்துள்ளன. இப்பகுதிகள் தனித்தீவுப்போல் காட்சியளிக்கும் நிலையில், 500 வீடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை  பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.   இந்நிலையில் கேரளாவில் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டகையில் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் 250க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 123 பேரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதையுண்ட 125க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் காணவில்லை என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. நிலச்சரிவு பேரிடரை சந்தித்துள்ள வயநாட்டில் இரவிலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சூரல் மலை, முண்டகை பகுதியில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. நீரோட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் தற்காலிக பாலம் அமைத்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுவருகின்றன.