×

ராகுலுக்கு பாதுகாப்பு குறைபாடு - அமித்ஷாவுக்கு கார்கே கடிதம்!!

 

சமூக, பொருளாதார, அரசியல் அநீதிகளுக்கு எதிராக காங்கிரஸ் எப்போதும் எழுந்து நிற்கும். இந்திய நீதிப் பயணம் விளிம்புநிலை மக்களுக்கு நீதிக்கான உரிமையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இன்று, நாடு வேலை நெருக்கடி, கட்டுப்பாடற்ற பணவீக்கம், மொத்த பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக அமைதியின்மை, மக்களின் குரல்களை நசுக்குதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.  

பாஜக அரசாங்கம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குக் கண்ணை மூடிக்கொண்டு, செல்வத்தையும் அதிகாரத்தையும் ஒரு சிலரின் கைகளில் குவிப்பதே அதன் ஒரே நோக்கமாக கொண்டுள்ளது. நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்கிறது. காங்கிரஸ் எப்போதும் மக்களின் குரலை உயர்த்தி வருகிறது. இந்திய நீதிப் பயணம் இந்திய மக்களுக்கு எதிராக பாஜக இழைக்கும் அநீதிகளை எதிர்த்துப் போராடுகிறது. இந்திய ஒற்றுமை நீதி பயணம் நீதி கிடைக்கும் வரை தொடரும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அசாமில் தேசிய ஒற்றுமை நீதிக்கான பயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். நீங்கள் உடனே தலையிட்டு அசாம் முதல்வர் மற்றும் டிஜிபிக்கு தகுந்த உத்தரவை வழங்க வேண்டும் என்று   உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.