×

பாஜகவினர் ஜனநாயகத்தை ஒழித்து கட்டுகின்றனர் - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

 

கேரளா, கர்நாடகா, தெலங்கானா போன்ற பாஜக ஆளாத மாநிலங்களில் பாகுபாடு காட்டப்படுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு அரசு போதிய நிவாரண நிதி வழங்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து தமிழக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. அதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த எம்.பிக்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டன. கேரளாவை சேர்ந்த எம்.பிக்களும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன. இதேபோல் காங்கிரஸ் தலைவர் கார்கே மத்திய அரசுக்கு எதிராக கறுப்பு அறிக்கை வெளியிட்டார். 

கருப்பு அறிக்க வெளியிட்டபின் செய்தியாளர்களை சந்தித்த கார்கே கூறியதாவது:  நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து. கடந்த 10 ஆண்டுகளில் 411 எம்எல்ஏ-கள் பாஜகவால் பறிக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ காங்கிரஸ் ஆட்சிகளை பாஜக கவிழ்த்துள்ளது. அவர்கள் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுகின்றனர். பாஜக ஒருபோதும் பேசாத வேலையில்லாத் திண்டாட்டத்தின் முக்கியப் பிரச்சினையை நாங்கள் எழுப்புகிறோம். கேரளா, கர்நாடகா, தெலங்கானா போன்ற பாஜக ஆளாத மாநிலங்களில் பாகுபாடு காட்டப்படுகிறது.