×

விபத்தில் சிக்கிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி!

 
மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
மேற்குவங்க முதலமைச்சரும் திருநாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு கட்சி சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பும் போது அவரது கார் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெத்தியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது நெத்தியிலிருந்து இரத்தம் அவரது முகம் முழுவதும் வலிந்து ஓடியது. உடனடியாக அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
உடனடியாக உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, விபத்தில் காயமடைந்துள்ளதாக அக்கட்சி எக்ஸ் தளத்தில் தகவல் தெரிவித்துள்ளது. நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனையில் மம்தா அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது