×

‘ஏன் இன்னும் EMI கட்டவில்லை..?’ நிதி நிறுவன நெருக்கடியால் பைக்கை தீயிட்டு கொளுத்திய இளைஞர்

 

தெலுங்கானாவில் தனியா ர் நிதி நிறுவனத்தின் மூலம் பைக் பெற்ற இளைஞர், இந்த மாதத்திற்கான இஎம்ஐ செலுத்தாததால் நிதி நிறுவன ஏஜெண்ட் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்தால் அவர்கள் கண் முன்னே பைக்குக்கு தீ வைத்த இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் ஷிவம்பேட்டையில் தங்கியுள்ள இளைஞர் ஒருவர் இஎம்ஐ மூலம் பைக் வாங்கியுள்ளார். மாதந்தோறும் சரியாக இஎம்ஐ செலுத்தி வந்தார்.  ஆனால், இந்த மாதம் சில காரணங்களால் பைக்கின் இஎம்ஐ செலுத்த முடியவில்லை.  இதனால் நிதி நிறுவன ஏஜென்ட்களிடம் இருந்து போன் அழைப்புகள் வரத் தொடங்கின.  அந்த இளைஞர் பணம் செலுத்த  சிறிது நேரம் தருமாறு கேட்டான்.  ஆனால் நிதி நிறுவனத்தின் முகவர்கள் செவிசாய்க்கவில்லை. இறுதியாக பைக்கின் இஎம்ஐ செலுத்த வேண்டும் என்று கூறி அந்த இளைஞரின் வீட்டிற்கு வந்து  சத்தம் போட்டது மட்டுமின்றி, வீட்டின் மூன் இருந்த பைக்கின் இஎம்ஐ கட்டுமாறும் மிரட்டியுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், நிதி நிறுவன முகவர்கள் பார்த்து கொண்டிருந்தபோதே பைக்கிற்கு தீ வைத்து எரித்தார். இதில் பைக் முற்றிலும் எரிந்தது, இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  உண்மையில் என்ன நடந்தது என்று விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட இளைஞர், நிதி நிறுவனத்தின் முகவர்கள் அளித்த ஆதாரத்துடன் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  போலீசார் தெரிவித்தனர்.