×

பிரதமர் மோடிக்கு அரசியல் நாகரீகம் என்பது அறவே இல்லை- மன்மோகன் சிங்

 

ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் வாக்காளர்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வருகிற  ஜூன் 1-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. 

இந்நிலையில் பஞ்சாப் வாக்காளர்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில், “பிரதமர் மோடிக்கு அரசியல் நாகரீகம் என்பது அறவே இல்லை. ஜனநாயகமும், நமது அரசியலமைப்பும் ஒரு சர்வாதிகார ஆட்சியின் தொடர்ச்சியான தாக்குதல்களில் இருந்து, பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய நமக்கான இறுதி வாய்ப்பு இந்த தேர்தல். இந்த தேர்தல் பரப்புரையின் உரைகளை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுகள் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், ஒரு சமூகத்திற்கு எதிரான வெறுப்பை தூண்டும் வகையிலும் உள்ளது. கடந்த காலத்தில் எந்த பிரதமரும் இதுபோன்று வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதில்லை. மோடியின் பேச்சுகள் பிரதமர் பதவி மீதான மதிப்பை குறைக்கிறது. சர்வாதிகாரத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை காக்க மக்கள் வாக்களிக்க வேண்டும்.மோடி போல வேறு எந்த பிரதமரும் இந்தளவுக்கு வெறுப்பு பேச்சை பேசியதே இல்லை ” எனக் குறிப்பிட்டுள்ளார்.