×

கர்நாடகாவிலும் நிலச்சரிவு! சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்தன

 

கேரளாவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்திலும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் மங்களூரு- பெங்களூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மங்களூரு- பெங்களூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹொசன் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இதையடுத்து அங்கு மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சாலையில் சரிந்துள்ள பாறைகள், மரங்களை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.