கூட்டணியில் 6 கட்சிகளுக்கு அமைச்சர் பதவி - பாஜக திட்டம்
என்.டி.ஏ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யவுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மோடி மீண்டும் ஆட்சியமைக்க சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து வரும் ஜூன் 8-ல் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம், ஷிண்டே சிவசேனா, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஜனசேனா உட்பட 6 கட்சிகளுக்கு பாஜக கூட்டணியில் அமைச்சர் பதவி தரப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பான்மை இல்லாததால் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ள நிலையில், உள்துறை, பாதுகாப்புத்துறை உட்பட முக்கிய துறைகளைக் கேட்டு தெலுங்குதேசம் கட்சி பாஜகவுக்கு நிபந்தனை விதித்துள்ளதாம்.