வாரணாசியில் மோடி, வயநாட்டில் ராகுல் முன்னிலை
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என்னும் பணி தொடங்கியது
தபால் வாக்குகள் என்னும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேலாகவும் இந்தியா கூட்டணி 110 தொகுதிகளுக்கு மேலாகவும் முன்னிலையில் இருந்து வருகிறது
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி, கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.
கர்நாடகாவின் ஹசன் தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தள கட்சி வேட்பாளர் பிர்ஜ்வெல் ரேவண்ணா முன்னிலை - பாலியல் புகார்களில் சிக்கி தேடப்பட்டு வந்த இவர் சில தினங்களுக்கு முன்புதான் கைது செய்யப்பட்டிருந்தார்
குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலை
புதுடெல்லி நாடாளுமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சோம்நாத் பாரதி தபால் வாக்குகளில் முன்னிலை இந்த தொகுதியில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மகள் பாசுரி ஸ்வராஜ் களம் காண்பது குறிப்பிடத்தக்கது
உத்திர பிரதேசத்தின் முக்கியமான தொகுதிகளில் ஒன்றான மீரட் தொகுதியில் ராமாயணம் நாடகத்தில் ராமராக நடித்த அருண் கோவில் தபால் வாக்குகளில் பின்னடைவு
பாஜக ஆளும் மாநிலமான ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி தபால் வாக்குகளில் முன்னிலையில் இருந்து வருகிறது