×

#BREAKING பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி

 

இந்திய நாட்டின் பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் பதவியேற்பு விழா  நடைபெற்றது. விழாவில் இந்திய நாட்டின் பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிபிரமாணம் செய்துவைத்தார்.

நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டனர். பிரதமராக மோடி, 30 ஒன்றிய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். குறிப்பாக மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வரான சிவராஜ் சௌஹான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதேபோல் மத்திய அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு முன்னர் பதவியேற்ற மோடி, அமித் ஷா, ராஜ்நாத், நிதின் கட்கரி அனைவரும் இந்தியில் உறுதிமொழி ஏற்றநிலையில், ஆங்கிலத்தில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார் நிர்மலா

 பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ கூட்டணி அரசின் அமைச்சர்களாக எச்.டி குமாரசாமி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மாஞ்சி ஆகியோர் பதவியேற்றுள்ளனர். 

மத்திய அமைச்சர்களாக மட்டுமே இப்போது பதவியேற்கின்றார்கள். அவர்களுக்கான துறைகள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் 240 இடங்களில் பாஜக வென்றிருந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது என்பது குறிப்படத்தக்கது.