×

புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்?

 

டெல்லியில் இன்று மாலை நடக்க உள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன் 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் கூட்டணி கட்சிகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகு, அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். 


மூன்றாவது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி. குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15க்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர் இன்று மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். ராமு மோகன் நாயுடு மற்றும் சந்திரசேகர் பெம்மசானி ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர் குமாரசுவாமி மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது அமைச்சரவையில் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. மேலும் மத்திய அமைச்சர்களாக உள்ள அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அர்ஜுன் ராம் மெகுவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட பலருக்கும் மத்திய அமைச்சரவையில் மீண்டும் இடம் வழங்கப்பட்டுள்ளது. 

அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும் மத்திய அமைச்சராக உள்ளார். ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார்க்கு அமைச்சரவையில் வழங்கப்ட்டுள்ளது. ஆந்திர மாநில பாஜக தலைவரான புரந்தேஸ்வரியும் மத்திய அமைச்சராகிறார்.