×

’நான் உங்கள் பெரிய ரசிகை’ மும்பை சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்

 

மும்பையில் தன்னை சந்திக்க விரும்பிய பிரனுஷ்கா என்ற மாணவியின் விருப்பத்தை நிறைவேற்றியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

‘நான் உங்கள் பெரிய ரசிகை..’ மும்பை வரும் உங்களை சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமூக வலைதளம் வாயிலாக மும்பை சிறுமி பிரனுஷ்கா கோரிக்கை வைத்திருந்தார். பிரனுஷ்காவின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, அவரை தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுமியின் வீடியோவை பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மும்பையில்‌, என்னை சந்திக்க விரும்பிய அறிவார்ந்த இரக்கப்‌ பண்பு கொண்ட பிரணுஷ்கா என்ற மாணவியின்‌ விருப்பத்தை நான்‌ நிறைவேற்றினேன்‌.  


மணிப்பூரில்‌ நடந்த வன்முறை இவரைப்‌ போன்ற ஒரு பள்ளி மாணவியைக்கூட எவ்வாறு பாதித்துள்ளது என்பதைப்‌ பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது. அதிகாரத்தில்‌ இருப்பவர்கள்‌ அமைதி மற்றும்‌ நல்லிணக்கத்தை நிலைநிறுத்த உழைக்க வேண்டும்‌ என்பதற்கு இது ஒரு தெளிவான நினைவூட்டலாகும்‌.  ஐஏஎஸ்‌ அதிகாரியாக வேண்டும்‌ என்ற பிரணுஷ்காவின்‌ கனவு நனவாக வாழ்த்துகிறேன்‌.” எனக் குறிப்பிட்டுள்ளார்.