×

இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு ! முதல்நாளே ஆட்டம் காணும் கூட்டணி

 

இணை அமைச்சர் பதவியை ஏற்க அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவையில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரஃபுல் படேலுக்கு வழங்கப்பட்ட இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒன்றிய அமைச்சராக பதவி வகித்த பிரஃபுல் படேலுக்கு மீண்டும் அமைச்சராக பதவி வேண்டும் என்றும், அதற்காக காத்திருப்பதாகவும் அஜித் பவார் பாஜகவிடம் தெரிவித்துள்ளார். மோடி இல்லத்தில் நடந்த தேநீர் விருந்துக்கும்  தேசியவாத காங்கிரஸை சேர்ந்த எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இணை அமைச்சர் பதவிக்க தேசியவாத காங்கிரஸ் மறுப்பு தெரிவித்ததால் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி வழங்குவதாக பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் கூறுகையில்,  “இணையமைச்சர் பதவி தந்ததால் அமைச்சரவையில் தற்போத்க்கு இடம்பெறவில்லை. காத்திருக்கிறோம். பிரபுல் படேல் ஏற்கனவே கேபினட் அமைச்சராக இருந்ததால் அதனை கேட்டோம். ஆனால் பாஜக தனி பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பொறுப்பை தருவதாக கூறியது” எனக் கூறியுள்ளார்.