×

தொடர்ந்து 6 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
 

 

 பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்றைய தினம்  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  தாக்கல் செய்கிறார். பிரதமர்  மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இதுவாகும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் தொடர்ந்து அவர்  6 முறையாக பட்ஜெட்  தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு இடைக்கால பட்ஜெட் நகல்கள் நாடாளுமன்றத்திற்கு வந்தன.