×

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தேசிய மக்கள் கட்சி!

 

மணிப்பூரில் பாஜக கூட்டணியில் இருந்து தேசிய மக்கள் கட்சி அதிரடியாக விலகியது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இரு சமூக மக்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இன்று வரை இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு எட்டப்படவில்லை. மணிப்பூர் கலவரம் விவகாரத்தில் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதேபோல் அம்மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசும் இது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கவில்லை என புகார் எழுந்து வருகிறது. 

இந்த நிலையில், மணிப்பூரில் பாஜக கூட்டணியில் இருந்து தேசிய மக்கள் கட்சி அதிரடியாக விலகியது. பாஜகவுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கோன்ராட் சங்மா, ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 7 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள தேசிய மக்கள் கட்சி, பாஜக கூட்டணியில் 2வது பெரிய கட்சியாகும். ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் இன கலவரத்தை, கட்டுப்படுத்த ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக்கட்சி விலகியதால் மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை.