×

ஜூன் 25 அரசமைப்பு படுகொலை தினமாக அனுசரிப்பு - மத்திய அரசு அறிவிப்பு  

 

ஆண்டுதோறும்  ஜூன் 25 அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை அரசமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட  ஜூன் 25ஆம் தேதியை அரசமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்கும் அறிவிப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

எமர்ஜென்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். சர்வாதிகாரத்தை எதிர்கொண்டு, ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடிய கோடிக்கணக்கான மக்களை கவுரவிப்பதே  மோடி அரசின் நோக்கம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.