#BREAKING மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு!
Jun 26, 2024, 11:29 IST
மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓம் பிர்லா, குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
மக்களவை சபாநாயகர் பதவிக்கு கொடிக்குன்னில் சுரேஷின் பெயரை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முன்மொழிந்தனர். மக்களவை சாநாயகர் தேர்தலில் வெற்றி பெற பெரும்பான்மைக்கு 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவைஎன்ற நிலையில் மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லாவின் பெயரை முன்மொழிந்தார் பிரதமர் மோடி.
பிரதமரால் முன்மொழியப்பட்ட ஓம் பிர்லாவின் பெயரை பாஜக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். அதன்படி ஓம் பிர்லா தேர்வானார். மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடியும் , எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் வாழ்த்து தெரிவித்து அவரது இருக்கையில் அமரவைத்தனர்.