×

பைக்கில் பட்டாசு கொண்டு சென்றபோது திடீரென வெடித்து சிதறியதில் ஒருவர் பலி

 

ஆந்திர மாநிலம் ஏலூரில் பைக்கில் பட்டாசு கொண்டு சென்றபோது திடீரென வெடித்து சிதறியதில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாடு முழுவதும் தீபாவளியை பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  ஏளூரில் பைக்கில் தீபாவளிக்காக பட்டாசு வாங்கி கொண்டு பைக்கின் முன்புறத்தில் மூட்டையாக வைத்து கொண்டு சென்றபோது  வெடித்து சிதறியது. இந்த தீ விபத்து பைக்கில் இருந்த பட்டாசு பை  சாலையில் உராசி கொண்டே சென்றுள்ளது. இதில்  தரையில்  உரசி கொண்டே சென்றதில்  தீபிடித்தது தெரிய வந்தது. இந்த  வெடிவிபத்தில் பைக்கில் பட்டாசு கொண்டு சென்ற துர்காசி சுதாகார் உடல் சிதறி இறந்தார். மேலும் அங்கு சாலையோரம் நின்று இருந்த 4  தபேலு சாய், சதீஷ், ஷஷி, ஸ்ரீநிவாஸ், பெத்திராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.