×

மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!

 

 பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்றைய தினம்  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்தார். பிரதமர்  மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இதுவாகும்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்ததை கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் .ஜார்க்கண்ட் மாநில அரசியல் விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்ததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.