×

ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒருபோதும் ஒப்பிட கூடாது- பிரதமர் மோடி

 

ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒருபோதும் ஒப்பிட கூடாது, அவ்வாறு செய்வது அவர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என மாணவர்களின் பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள அரசு செயல்விளக்கப் பல்நோக்குப் பள்ளியைச் சேர்ந்த பாக்யலட்சுமி, குஜராத்தின்  ஜெஎன்வி பஞ்சமஹாலைச் சேர்ந்த த்ரஷ்டி செளகான், கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த சுவாதி திலீப் ஆகியோர் எழுப்பிய, சகமாணவர்களுக்கிடையேயான அழுத்தம் மற்றும் போட்டி குறித்து பதிலளித்த பிரதமர், போட்டியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இருப்பினும், போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெரும்பாலும் ஆரோக்கியமற்ற போட்டிக்கான ஆரம்ப விதைகள் குடும்பச் சூழ்நிலைகளால் விதைக்கப்படுகின்றன. இது ஒரே குடும்பத்தில் பிறந்த உடன்பிறப்புகளிடையே ஆரோக்கியமற்ற போட்டிக்கு வழிவகுக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். குழந்தைகளுக்கிடையே ஒப்பீடுசெய்வதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். 

குழந்தைகள் ஆரோக்கியமான முறையில் போட்டியிடும் அதே வேளையில், ஒருவருக்கொருவர் உதவுவதற்கு முன்னுரிமை அளிக்கும் காணொளியைப் பிரதமர் உதாரணமாக சுட்டிக்காட்டினார். தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவது யாருக்கும் பயன் அளிக்காத விளையாட்டு அல்ல என்றும், ஒரு நண்பரின் நல்ல செயல்திறன் களத்தை சிறப்பாக செயல்படுவதை கட்டுப்படுத்தாது என்பதால் போட்டி தனக்குள்ளேயே உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தப் போக்கு, ஊக்கமளிக்கும் நண்பர்களாக இல்லாதவர்களுடன் நட்பு கொள்ளும் போக்கை ஏற்படுத்தக்கூடும் என்று பிரதமர் கூறினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தங்கள் குழந்தைகளின் சாதனையை முகவரி அட்டையாக மாற்ற வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் தங்கள் நண்பர்களின் வெற்றியில் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். நட்பு என்பது கொடுக்கல் வாங்கல் உணர்வு அல்ல" என்று பிரதமர் கூறினார்.