×

சிலிண்டரின் விலையை ₹100 குறைத்து பிரதமர் மோடி அறிவிப்பு

 

மகளிர் தினத்தை ஒட்டி கேஸ் சிலிண்டரின் விலையை ₹100 குறைத்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 மகளிர் தினத்தை ஒட்டி சிலிண்டர் விலையை ₹100 குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக  பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குறிப்பாக மகளிருக்கு நிதிச்சுமையை குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி , இன்று, மகளிர் தினத்தையொட்டி, எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.100  குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது.  இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது நாரி சக்திக்கு பயனளிக்கும்.