×

மூவர்ணக் கொடியுடன் செல்ஃபி எடுத்து பதிவிடுங்கள் - பிரதமர் மோடி கோரிக்கை.. 

 


சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடியுடன் செல்பி எடுத்து பகிருங்கள் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.  

சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’இயக்கத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. அதாவது நாட்டு மக்கள் தங்களது சமூக வலைதள புரொஃபைல் பிக்சர்களாக ( சுயவிவரப் படம்) மூவர்ணக் கொடிபுகைப்படத்தை வைப்பது, வீடுகள் மற்றும் தெருக்களில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதே இந்த இயக்கத்தின் அம்சமாகும்.  

நாடு முழுவதும் வருகிற 15ம் தேதி 77வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.  அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில், தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். சுதந்திர தின நிகழ்ச்சிக்கான  பாதுகாப்பு ஒத்திகை   தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேசியக்கொடியுடன் இருக்கும் புகைப்படத்தை பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தின் புரொஃபைல் பிக்சராக வைத்திருக்கிறாட்ர்.  

மேலும், தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிருமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்த ஆண்டு சுதந்திர தினம் நெருங்கும் நிலையில், ‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி #HarGharTiranga இயக்கத்தை மீண்டும் ஒரு மறக்கமுடியாத வெகுஜன இயக்கமாக மாற்றுவோம். நான் எனது சுயவிவரப் படத்தை மாற்றி வருகிறேன். நமது மூவர்ணக் கொடியைக் கொண்டாடுவதில் என்னுடன் இணையுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் செல்ஃபி படங்களை harghartiranga.com இல் பகிருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.