×

காரில் கடத்திவரப்பட்ட ரூ.24 கோடி மதிப்புள்ள 120 கிலோ போதை மருந்து பறிமுதல் 

 

தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் ரூ.24 கோடி மதிப்புள்ள 120 கிலோ போதை மருந்து பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் யாதாதிரி புவனகிரி மாவட்டம் பீ.பி.நகர் மண்டலம் குடுரு டோல் பிளாசாவில் போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுப்பட்ட போது ஒரு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.24 கோடி மதிப்புள்ள 100 கிலோ போதை மருந்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த போதை மருந்து கடத்தி வந்த நெட்டி கிருஷ்ணா ரெட்டி, பைசான் அகமது மற்றும் சுனில் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் யாதகிரிகுட்டா மண்டலம் ராமாஜிப்பேட்டையில் உள்ள ஸ்ரீ யாதாத்ரி லைஃப் சயின்ஸ் கெமிக்கல் தொழிற்சாலையில் அனுமதியின்றி 100 கிலோ போதைப் பொருட்களை தயாரித்து கடத்தி கொண்டு மும்பையை சேர்ந்த ஒருவரின் மூலம் ஐதராபாத் வழியாக மும்பை கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து அந்த தொழிற்சாலையில் போலீசார் சோதனைசோதனை செய்ததில் மேலும் 20 கிலோ போதை மருந்து பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் வழக்கில் 
வாசுதேவாச்சாரி, பானு பிரகாஷ், சத்தியநாராயணா, சல்மான் சலீம் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய 5 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.24 கோடிக்கு மேல் மதிப்புள்ள மொத்தம் 120 கிலோ எடையுள்ள போதை மருந்து, 4 செல்போன்கள் மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக யாதாதிரி புவனகிரி காவல் ஆணையர் ராஜேஷ் சந்திரா தெரிவித்தார்.