×

சிவன் கோயில் கருவறையில் மது அருந்திய பூசாரி

 

ஆந்திராவில் 700 ஆண்டுகால பழமையான சிவன் கோயில் கருவறையில் மது அருந்திய  பூசாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில்  உள்ளது. அந்த கோயிலில் பிரசாத் என்பவர் பூசாரியாக வேலை செய்து வரும் நிலையில் அவர் கோயிலில் உள்ள தாயார் சந்ததியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் மதுவை ஊற்றி எதையோ அருந்தி கொண்டிருந்தார்.

இதனை அங்கிருந்த ஊழியர்கள்  பூசாரி பிரசாத் மது அருந்துவதை  வீடியோ எடுத்து  சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாக மாறிய நிலையில் பூசாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.