பாஜக மூத்த தலைவர் காலமானார்
Jul 26, 2024, 15:44 IST
மத்திய பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் பாஜக தலைவராக இருந்த பிரபாத் ஜா (67) காலமானார்.
மத்திய பிரதேசத்தின் மூத்த தலைவரும், பாஜக முன்னாள் தலைவருமான பிரபாத் ஜா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 67. கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் முதலில் டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபாத் ஜா, ஜூன் 29 அன்று முதல் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 26) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கட்சியின் தேசிய துணைத் தலைவராகவும் இருந்தார். இவரது மறைவிற்கு பாஜக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரபாத் ஜாவின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த கிராமமான பீகாரில் உள்ள சிதாமர்ஹி கிராமத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.