×

நாளை வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி

 

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு நாளை (ஆகஸ்ட் 10) செல்கிறார் பிரதமர் மோடி.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக கடந்த 30ம் தேதி அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நிலச்சரிவோடு, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, வெள்ளேரிமலை, வைத்திரி ஆகிய கிராமங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. இதில் சூரல்மலை கிராமத்தின் ஒரு பகுதி அப்படியே மண்ணில் புதையுண்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.  500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கினர்.  வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு பிரதமர் மோடி நாளை (ஆகஸ்ட் 10) செல்கிறார். காலை 11 மணியளவில் கண்ணூர் செல்லும் பிரதமர் மோடி, வான் வழியாக நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுகிறார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரை சந்தித்து, நிவாரண முகாம்களை பிரதமர் பார்வையிடுகிறார்