×

 எம்ஜிஆர் - ஜெயலலிதா படத்தை வைத்து தேர்தல் பரப்புரை - பாஜக பிரமுகர்கள் 3 பேர் சஸ்பெண்ட்


 

 

புதுச்சேரியில் அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர் - ஜெயலலிதா படத்தை வைத்து தேர்தல் பரப்புரை மற்றும் அமைச்சர் நமச்சிவாயத்தை எம்ஜிஆர் போல சித்தரித்து சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து பாஜக பொது செயலாளர் மோகன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரி மாநில தலைமையின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, தலைமையின் அனுமதியின்றி செயல்பட்ட திரு.K.விஜயபூபதி, திரு.J.ராக் பெட்ரிக், திரு.K.பாபு இவர்கள் மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள். மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இவர்களுடன் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.