×

பாஜக-ஆர்எஸ்எஸ் அரசியல் சட்டத்தை அழிக்க நினைக்கின்றன - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 

இன்று நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே போர் நடந்து வருகிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார். 

ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இன்று நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே போர் நடந்து வருகிறது. ஒரு பக்கம் - இந்தியா கூட்டணி மறுபக்கம்- பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.இந்தியக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் அதே வேளையில், பாஜக-ஆர்எஸ்எஸ், அரசியல் சட்டத்தை அழிக்க நினைக்கின்றன.

அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல. இதில் பிர்சா முண்டா, அம்பேத்கர், பூலே மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் சிந்தனைகள் உள்ளன. இந்த அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஏழை மக்களைப் பாதுகாக்கிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நாடு இயங்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி விரும்புகிறது