×

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்காந்தி தேர்வு

 

நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. 

பாஜக மட்டும் தனித்து பெற்றிருப்பது 240 இடங்கள். ‘இண்டி’ கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பெற்றிருப்பது 234 இடங்கள். இதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெற்ற 29, ஆம் ஆத்மி கட்சி பெற்ற 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற 2 என, 35 இடங்கள் காங்கிரஸை எதிர்த்து பெற்ற இடங்கள்.

இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டதை தற்காலிக சபாநாயருக்கு காங்கிரஸ சார்பில் முறைபடி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.