பாஜக அரசு தனது நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது - ராகுல் காந்தி
Feb 4, 2024, 09:39 IST
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், நாட்டில் பணக்காரர், ஏழை என இரண்டே ஜாதிகள் தான் இப்போது இருப்பதாக பிரதமர் கூறுகிறார். பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்கள் இல்லை, பழங்குடியினர் என்று யாரும் இல்லாதபோது, மோடி ஏன் இத்தனை ஆண்டுகளாக தன்னை OBC என்று சொல்லி கொண்டார்? எனவே இனி அது ரகசியமாக இருக்காது - அது வெளிப்படையாகக் கணக்கிடப்படும். சமூக மற்றும் பொருளாதார நீதியை வழங்க, ஒரு எண்ணிக்கை இருக்க வேண்டும்.
பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டு வர, ஒரு கணக்கீடு வேண்டும் பாஜக அரசு தனது நாட்களைக் எண்ணிக்கொண்டிருக்கிறது. நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.