#Rahulgandhi வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி
Apr 3, 2024, 13:25 IST
வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது நாளை மறுநாள் உடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தொண்டர்கள் படை சூழ பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்காந்தி.
தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார். இதன் மூலம் 2வது முறையாக வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல்காந்தி.