×

Budget 2024: நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்- ராகுல்காந்தி விமர்சனம்

 

மத்திய பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.


மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. கல்வி, தொழில்துறை மேம்பாடு வேலை வாய்ப்புகளுக்கு 1. 48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11,500 கோடி ரூபாய் பீகார் மாநிலத்திற்கான பேரிடர் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, “`கூட்டணி கட்சிகளை தாஜா  செய்தும், மற்ற மாநிலங்களை வஞ்சித்துள்ளது. அம்பானி மற்றும் அதானிக்கு பயனளிக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. பெரு முதலாளிகளை குஷிப்படுத்தியும்,  சாமானிய மக்களுக்கு எத்தகைய நிவாரணமும் வழங்காத பட்ஜெட். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டை காப்பி பேஸ்ட் செய்யும், பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது” என்றார்.