×

“இந்து தர்மத்தை பாஜக பின்பற்றுவதில்லை”... சிவனின் புகைப்படத்துடன் புரட்டி எடுத்த ராகுல்!  

 

இன்றைய மக்களவை கூட்டத்தொடர் படு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியை தனது கேள்விகளால் திக்குமுக்காட வைத்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் சின்னத்துடன் கடவுள்களை ஒப்பிட்டு பேசியதால் ராகுலுக்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மக்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடிக்கு கடவுளுடன் நேரடி தொடர்பு இருக்கிறது. அவரால் நேரடியாகவே கடவுளுடன் பேச முடியும். பரமாத்மா நேரடியாகவே மோடியின் ஆன்மாவுடன் பேசுவார். நாம் எல்லோரும் Bilogical.நாம் பிறப்போம், மரணிப்போம், ஆனால் பிரதமர் மோடி அப்படிப்பட்டவர் அல்ல. அவர் Non Biological. இவ்வளவு சொல்லும் மோடி, காந்தி இறந்துவிட்டதாக சொல்கிறார். திரைப்படத்தின் வழி காந்தி மீண்டும் உலகால் அறியப்பட்டார் என்கிறார் மோடி, பிரதமர் மோடியின் அறியாமையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

சிவன், ஏசு மக்களுக்கு ஆசி வழங்குவது ஒரே அடையாளத்தில் தான். காங்கிரஸின் சின்னமும் அதுதான். சிவனின் அபய முத்திரைதான் காங்கிரஸ் கட்சியின் சின்னம். சிவ பெருமானின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பது வன்முறையின் சின்னம் அல்ல, அது அகிம்சையின் சின்னம். மிகப் பெரிய மனிதர்கள் அனைவரும் அகிம்சை, பயத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஆனால், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு உள்ளிட்ட எண்ணங்களோடு பேசுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக கடுமையான தாக்குதலுக்கு அரசியல் சாசனம் உள்ளானது. இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதுவரை மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஏன் செல்லவில்லை? மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார். மணிப்பூர் இந்திய மாநிலம் இல்லை என்ற எண்ணம் பாஜகவிற்கு உள்ளது என நினைக்கிறேன். ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்தையும் மத்திய பாஜக அரசு பறித்து விட்டது

மக்களவையில் எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமையே. அதிகாரம் எங்களுக்கு முக்கியமல்ல அதிகாரத்தைவிட உண்மைதான் சக்தி வாய்ந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. எனது எம்.பி. பதவியையும், வீட்டையும் பாஜக அரசு பறித்தது. ஒட்டுமொத்த இந்துக்களுக்கு பாஜக,மோடியின் பிரதிநிதி அல்ல. இந்து தர்மத்தை கூட பாஜக பின்பற்றுவது இல்லை. உண்மையான இந்து  தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பிரதமர் மோடியோ, பாஜகவோ இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அப்பகுதி மக்களிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டது. ராமர் கோயிலை அமைத்தாலும் அயோத்தி தொகுதியை பாஜக இழந்துள்ளது/ அக்னி வீரர்களுக்கு உரிய பயிற்சி அளிக்காததால் தான் சீனாவை எதிர்கொள்ள முடியவில்லை” என்றார்.