×

ஆந்திர முதல்வரின் சகோதரர் காலமானார்!

 

சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் ராமமூர்த்தி நாயுடு, நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டு தனது 72வது வயதில் காலமானார்.

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தம்பி ராமமூர்த்தி நாயுடு  ஹைதராபாத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 72.  ராமமூர்த்தி நாயுடுக்கு நவம்பர் 14 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்த ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள AIG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய-சுவாச பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் ராமமூர்த்தி நாயுடு, இன்று மதியம் 12.45 மணிக்கு உயிரிழந்தார். இறுதிச் சடங்குகள் நவம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாராவாரிபள்ளே கிராமத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரரான ராமமூர்த்தி நாயுடு 1994 தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியை (TDP) பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்ற பின்னர் ஆந்திர பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான நாரா ரோஹித்தின் தந்தை ஆவார், இவர் நியூயார்க் திரைப்பட அகாடமியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடதக்கது.