ஐசியூவில் ரத்தன் டாடா- சோகத்தில் உறவினர்கள்
Oct 9, 2024, 20:42 IST
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
டாடா சன்ஸ் குழும தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்று செய்தி வெளியானது. மும்பையில் உள்ள அவரது நெருங்கிய வட்டாரங்கள் மூலம் இத்தகவல் வெளிவந்துள்ளது. தற்போது மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஐசியூ பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மூத்த மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வந்தது. நேற்று பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல்நிலை சீராக இருந்த நிலையில், இன்று திடீரென அவரது உடல்நிலை சற்று மோசமடைந்துள்ளது.