×

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை புறக்கணித்தது சமாஜ்வாதி கட்சி!

 

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை புறக்கணித்தது சமாஜ்வாதி கட்சி.

அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.  இந்த விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ  ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள்,  தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், திரை  பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் உள்ளிட்டோருக்கு நேரடியாக அழைப்பிதழ் வழங்கும் பணி  நடைபெற்று வந்தாலும், அதே சமயம் நேரில் காண வாய்ப்பில்லா மக்கள் நேரடியாக விழா சம்பவங்களை காணும் வசதியும் விரிவாக செய்யப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை புறக்கணித்தது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியும் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் லாபத்துக்காக பாஜக - ஆர்.எஸ்.எஸ். இணைந்து நடத்தும் நிகழ்ச்சி என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.