×

மோடி 100 வரை வந்தாலும் பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்காது - சித்தராமையா

 

மோடி  100 வரை வந்தாலும் பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்காது என கர்நாடக முதல்வர் சித்தாராமையா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று காமரெட்டியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்தது.  இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் பங்கேற்றார்.  இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “ காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் தெலங்கானா காங்கிரஸ் கட்சி அறிவித்த  6 உத்தரவாதங்களை உடனடியாக நிறைவேற்றப்படும். கர்நாடகாவில் ஏற்கனவே 5 உத்தரவாதங்கள் செயல்படுத்தப்படுவதை அனைவரும் பார்க்க வேண்டும். கர்நாடகாவுக்கு கே.சி.ஆர் வந்தால் அவரை நாங்களே அழைத்து சென்று காண்பிப்போம். கர்நாடகாவில் 5 உத்தரவாத திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பி.ஆர்.எஸ்., பா.ஜ.க. என்ற வித்தியாசம் இல்லை, பி.ஆர்.எஸ் என்பது பா.ஜ.க பி.டீம்.

மோடி 100 முறை தெலுங்கானாவுக்கு வந்தாலும், பாஜக வேட்பாளர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. பிரதமர் மோடி கர்நாடகாவில் 48 கூட்டங்களை நடத்தியதையும், ரோட் ஷோ பிரம்மாண்டமாக பங்கேற்றார். அப்படி இருந்தும், பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த இடமெல்லாம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இவ்வளவு பொய்களை சொல்லும் பிரதமரை இதுவரை நான் பார்த்ததில்லை. பொய் சொல்லும் பிரதமருக்கு தெலுங்கானா மக்கள் புத்திசாலித்தனமாக தங்கள் வாக்குகள் மூலம் பாடம் புகட்டுவார்கள். மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலை மோசமாகிவிட்டது.  

காமாரெட்டி தொகுதியில் ரேவந்த் ரெட்டியால் முதல்வர் கேசிஆர் தோற்கடிக்கப்படுவார். காமரெட்டியைத் தவிர, கஜ்வேலிலும் முதல்வர் கே.சி.ஆர் தோல்வியடைவார். தேர்தலில் பி.ஆர்.எஸ்., பா.ஜ.கவை நிராகரித்து, காங்கிரசுக்கு ஆசி வழங்க வேண்டும். ரேவந்த் ரெட்டி காமரெட்டியுடன்  கோடங்கல் ஆகிய இரண்டு இடங்களில் வெற்றி பெறும். பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்த 34  சதவீத இட ஒதுக்கீட்டை 25 சதவீதமாக குறைத்த பெருமை கே.சி.ஆரையே சாரும். கேசிஆர் ஊழல் பணத்தை தேர்தலில் செலவு செய்து வருகிறார். கே.சி.ஆரின் பத்தாண்டு ஊழல் ஆட்சிக்கு விடைபெற வேண்டும். ஊழல் பணத்தில் வாக்குகளை வாங்க கே.சி.ஆர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டி தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி” என்றார்.