×

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது!

 

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு அணியாகவும், இண்டியா கூட்டணி மற்றொரு அணியாகவும் களமிறங்கின. இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 41 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். 

இந்த நிலையில், ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 38 இடங்களிலும், இந்தியா கூட்டணி 37 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதேபோல் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருவதால் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.