×

வாகன சோதனையில் பிடிப்பட்டவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்

 

வாகன சோதனையில் பிடிப்பட்டவர்களை நீதிமன்றம் மருத்துவமனையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.


வாகன சோதனையில் பிடிப்பட்ட மது பிரியர்களை மருத்துவமனையை சுத்தம் செய்ய உத்தரவிட்டு நீதிபதி புதுமையான தீர்ப்பு வழங்கினார்.  இந்த சம்பவம் தெலங்கானா மாநிலம்  மஞ்சிரியாலாவில் போக்குவரத்து போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்றவர்களை வாகன  சோதனை நடத்தியபோது 27 பேர்  ​மதுபோதையில் பேர் பிடிபட்டனர். அவர்களை போலீசார்  மாவட்ட  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, ​​முதலாவது கூடுதல் சிவில் நீதிபதி  ஒரு வாரத்திற்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மஞ்சிரியாலா மாவட்ட தாய்சேய்  நல  மருத்துவமனை சுற்றுப்புறத்தை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். 

இதனால் மஞ்சிரியாலா போக்குவரத்து ஏ.எஸ்.ஐ. ஜி.நந்தையா பிடிப்பட்ட  மதுப் பிரியர்களை அழைத்து வந்து மருத்துவமனை சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்தார்.  யாராவது வரவில்லை என்றால், அவர்கள் மேலும் ஒரு வாரம் சுத்தம் செய்ய உத்தரவிட்டதால்  மது பிரியர்கள் புலம்பி கொண்டே சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.