×

அதானி வழங்கிய ரூ.100 கோடியை புறக்கணித்த தெலங்கானா அரசு 

 

அதானி குழுமம் வழங்கிய ரூ.100 கோடி நிதி வேண்டாம் என தெலங்கானா அரசு புறக்கணித்துள்ளது.

தெலங்கானா தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, “காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அளித்த ஆலோசனையின்படி தெலங்கானா மாநிலத்தில் அனைத்து திட்டங்களுக்கான டெண்டர்களில் அனைவருக்கும் தெலுங்கானா அரசு வாய்ப்பு அளித்து வருகிறது. அதானி நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவது காங்கிரஸ் அரசின் நோக்கமல்ல. யங் இந்தியா ஸ்கில் யுனிவர்சிட்டிக்கு அதானி குழுமம் ரூ.100 கோடி  கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் கீழ் வழங்க முன்வந்துள்ளது. ஆனால்  தற்போதுள்ள சூழலில் சிஎஸ்ஆர் கீழ் அரசுக்கு ரூ.100 கோடி தருவதாக அதானி குழுமம் கூறியுள்ள நிலையில், தெலுங்கானா அரசு அதானி குழுமம் வழங்கும் நிதி பெற விரும்பவில்லை. இதற்காக அதானி அறக்கட்டளைத் தலைவருக்கு அரசு செயலாளர் ஜெயேஷ் ரஞ்சனும் மூலம்  நேற்று கடிதம் எழுதியுள்ளோம். அதானி உடனான சர்ச்சைக்கும் தெலுங்கானா அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

பிஆர்எஸ் கட்சி தலைவர் கேசிஆர் அதானியை தெலுங்கானாவுக்கு அழைத்து வந்தார். பிஆர்எஸ் ஆட்சியில் தெலுங்கானாவில் பல திட்டங்கள் அதானி குழுமத்திற்கு கொடுக்கப்பட்டது” என்றார். மேலும் அதானியுடன் முன்னாள் முதல்வர் கேசிஆர் இருக்கும் புகைப்படத்தை செய்தியாளர்களிடம் காண்பித்து யார் அதானிக்கு கும்பிட்டு வரவேற்றது என கேள்வி எழுப்பினார்.