×

தெலங்கானாவில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 - காங்கிரஸ் வாக்குறுதி

 

தெலங்கானா மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. 

ஐதராபாத் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, “வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை, வீடு கட்ட ரூ.5 லட்சம் தரப்படும். மகாலட்சுமி திட்டத்தின்கீழ் ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் டிஎஸ்ஆர்சி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ரைத்து போரோசா பிரசாத் திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.15,000 விவசாய கூலிக்கு ரூ.12,000 வழங்கப்படும்.  இளைஞர்களுக்கு ரூ.5 லட்சம், கோச்சிங் கட்டணம் முழுவதுமாக வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.4,000 வழங்கப்படும். 6 உத்தரவாதங்களை அறிவிக்கிறோம். அனைத்தையும் நிறைவேற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். 

தாம்பரம் மேம்பாலம் வழியாக மேடவாக்கத்தில் ஒன்று சேர்ந்து வேளச்சேரி மெயின்ரோடு வழியாக எடுத்துச் செல்லப்படும். ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின்கீழ் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் வழங்கப்படும். வாக்குறுதிகள் அனைத்தும் அமைச்சரவை பதவியேற்கும் அதே நாளில் அமலுக்கு கொண்டுவரப்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பது எனது கனவு. சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் எங்கள் அரசு பாடுபடும்.” என்றார்.