சமந்தாவை படுக்கைக்கு அழைத்த அமைச்சர்.? நாக சைதன்யா டைவர்ஸ் விவகாரம்.. நடிகர் நானி கடும் கண்டனம்..
நடிகர் நாக சைதன்யா - சமந்தா விவாகரத்துக்கு காரணம் கே.டி.ராம ராவ்தான் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா பேசியதற்கு நடிகர் நாணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவின் வனத்துறை அமைச்சராக இருப்பவர் கோண்டா சுரேகா. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், “ தெலுங்கு சினிமாவில் பெண்கள் பலர் விரைவாக திருமணம் செய்ய தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ்தான் காரணம். அவரால் பயந்து கொண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த பெண்களையும் அவர் விடவில்லை. சமந்தா மீது விருப்பம் கொண்டு அவர் வேண்டும் என்று கே.டி.ராமராவ் கேட்டார். நாகார்ஜுனாவின் என்.கன்வென்ஷன் சென்டர் ( அண்மையில் இடிக்கப்பட்டுவிட்டது) பிரச்சனையை முடித்துக்கொடுப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு நாகார்ஜுனாவும் ஒப்புக்கொண்டார். ஆனால் இதற்கு சமந்தா ஒப்புக்கொள்ளவில்லை. இதனாலேயே அவர் நாக சைதன்யா அக்கினேனியை விவாகரத்து செய்தார்.
அத்துடன் வீட்டு ஆண்களுக்கு போதை பொருள் கொடுப்பது கே.டி.ராமராவ் வழக்கம். அவர்களை அடிமையாக்கி.. அவர்கள் வீட்டில் இருக்கும் நடிகைகளை கேட்பதுதான் பாரத ராஷ்டிர சமிதி செயல் தலைவர் கே.டி.ராமராவ் ஸ்டைல்” என்று கோண்டா சுரேகா கூறியிருந்தார். அமைச்சரின் இந்த பேட்டி வைரலான நிலையில், தெலங்கு திரையுலகினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே நடிகர் நாகார்ஜுனா, சமந்தா, அமலா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் நானியும் அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “எப்பேற்பட்ட முட்டாள்தனத்தையும் பேசி தப்பித்து விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர், ஊடகங்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளை பேசுவது சரியல்ல. நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இச்செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.