×

வாக்களிக்க சென்ற இடத்தில் ஓட்டு மெஷினை உடைத்து நொறுக்கிய நபர்!

 

ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலை பொறுத்தவரையில் ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இது தவிர ஒடிசா - 4, பிகார் - 5, ஜார்க்கண்ட் - 4, மத்திய பிரதேசம் - 8, மகாராஷ்டிரா - 11, உத்தர பிரதேசம் - 13, மேற்கு வங்கம் - 8, ஜம்மு காஷ்மீர் - 1 ஆகிய மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் இன்று ஒரே கட்டமாக 175 தொகுதிகளில் நடைபெறுகிறது. மேலும் ஒடிசா மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்டம் இன்று நடைபெறுகிறது.

<a href=https://youtube.com/embed/xj60jB4HqHw?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/xj60jB4HqHw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில் ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாலுவாய் பள்ளி கிராம வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளர் ஒருவர், வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கிப்போட்டு உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தபட்டது. இயந்திரத்தை உடைத்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.